மேஷம்: மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலைகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரியின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
ரிஷபம்: பேச்சு திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நலம் சீராகும்.
மிதுனம்: ஒரே நாளில் பல வேலைகளை பார்க்க வேண்டி வரும். குடும்பத்தினரைப் பற்றி வெளியாரிடம் குறைவாகப் பேசாதீர்கள். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட வேண்டாம்.
கடகம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும்.
சிம்மம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.
கன்னி: உங்கள் முயற்சிக்கு தாயாரின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனம் சீராகும்.
துலாம்: மனதில் நிலவிய குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் நிலவும்.
விருச்சிகம்: காரியங்களை முடிப்பதில் இருந்துவந்த தடுமாற்ற நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சோம்பல், உடல் அசதி, நீங்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு.
தனுசு: ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும்.
மகரம்: முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. அடுத்தவர்களை குறைகூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ள முயலுங்கள்..
கும்பம்: பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.
மீனம்: பிள்ளைகளால் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago