மேஷம்: வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். தாய்வழி உறவுகளால் மனக்கசப்புகள் வரக் கூடும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டு.
ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். தோல்வி பயம் நீங்கும். சகோதரர்கள் உதவுவார்கள். பழைய கடன் பைசல் செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும்.
மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
கடகம்: முன்கோபம் அடிக்கடி தலைதூக்கும். கைவிட்டுப் போன நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் இப்போது நினைவுக்கு வரும்.
சிம்மம்: நெடுநாள் பழகிய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்ன சின்ன தடைகள் வரக் கூடும்.
கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்களுடைய பலம் பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள்.
துலாம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளின் திருமண காரியங்கள் குறித்து திட்டமிடுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். குடும்பத்தில் கூச்சல், குழப்பம் நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். திடீர் பயணம் உண்டு.
தனுசு: வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உங்கள் சக்திக்கு மீறி எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ, யாருக்கும் தரவேண்டாம். கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள்.
மகரம்: சமயோசிதமாகச் செயல்பட்டு பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். மூத்த சகோதரர் உதவியாக இருப்பார்.
கும்பம்: இழுபறியாக இருந்துவந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கிவர வாய்ப்பிருக்கிறது.
மீனம்: முன்கோபம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனின் அதிக அக்கறை காட்டுவீர்கள். பால்ய நண்பரைச் சந்தித்து முக்கிய விஷயம் குறித்து ஆலோசிப்பீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 mins ago
ஜோதிடம்
16 mins ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago