மேஷம்: மகளின் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.
ரிஷபம்: உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இழுபறியாக இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
மிதுனம்: கடந்தகால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.
கடகம்: திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. வாகனம் செலவு வைக்கும்.
» நம் முன்னோருக்கு பெருமாளே சிராத்தம் செய்யும் திருத்தலம்; பெருமாளுக்கு பிரண்டைத் துவையல் பிரசாதம்!
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாய்வழியில் மதிப்பு உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பணவரவு உண்டு.
கன்னி: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் இயன்றதை செய்து கொடுப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
துலாம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.
விருச்சிகம்: தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.
தனுசு: மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.
கும்பம்: முன்கோபத்தை குறையுங்கள். எளிதாக முடிய வேண்டிய காரியங்களைக்கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.
மீனம்: முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வாகனத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 mins ago
ஜோதிடம்
20 mins ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago