மேஷம்: சாதுர்யமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். இழுபறியாக இருந்த கடன் தொகை வசூல் ஆகும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். விருந்தினர் வருகை உண்டு.
ரிஷபம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். பணவரவு திருப்தி தரும்.
மிதுனம்: நயமாகப் பேசுபவர்களை நம்பி அவர்களிடம் சொந்த விஷயங்களை பகிராதீர்கள். முக்கிய பணிகளை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. திடீர் பயணம் உண்டு.
கடகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் காலம் கனிந்து வரும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.
சிம்மம்: வெளிநாட்டினர், வேற்று மதத்தினரால் சில காரியங்கள் நிறைவேறும். பிரபலங்களுக்கு நண்பராவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வாகனம் செலவு வைக்கும்.
துலாம்: இழுபறியாக இருந்த வேலைகள் விரைந்து முடியும். மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் வருங்காலத்தை பற்றி முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
விருச்சிகம்: தொட்ட காரியங்கள் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மூத்த சகோதரர் உதவுவார்.
தனுசு: அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
மகரம்: வேலைச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது உடல்நிலை லேசாக பாதிக்கும். நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். வீட்டு பராமரிப்பு செலவு ஏற்படும்.
கும்பம்: அடுத்தடுத்த செலவுகளால் சேமிப்புகள் கரையும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வெளிமாநில புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் செல்ல திட்டமிடுவீர்கள்.
மீனம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பங்கு வர்த்தகம், கமிஷன் வகைகளில் பணம் வரும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 mins ago
ஜோதிடம்
18 mins ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago