மேஷம்: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும்.
ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினரால் மனநிம்மதி கிட்டும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.
மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
கடகம்: சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்று, நடப்பது வேறாக இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து போகும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள்.
சிம்மம்: அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினருடன் தேவையற்ற வாக்குவாதம் வந்து போகும். சுபசெலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் ஏற்படக் கூடும்.
கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராக அமையும்.
துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். மூத்த சகோதரர் உதவுவார்.
விருச்சிகம்: உஙகளின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். மனைவியின் ஆலோசனைகள் ஏற்கக் கூடியதாக இருக்கும்.
தனுசு: எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உதவி கேட்டு உறவினர்கள் நெருக்கடி தருவார்கள். பால்ய நண்பரிடம் குறைகளை சொல்லி ஆறுதல் அடைவீர்கள்.
மகரம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும்.
கும்பம்: குடும்பத்தில் அமைதி நிலவும். கடன் பிரச்சினையை தீர்க்க மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்து சேரும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டு பேசுவீர்கள். உடன்பிறந்தோர்களால் உதவி கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago