இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நினைத்த காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள்.

ரிஷபம்: மனசாட்சிபடி செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

மிதுனம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். மாலை முதல் பிரச்சினைகள் படிப்படியாக விலகும்.

கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். திட்டமிடாத செலவு, பயணம் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.

கன்னி: உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள்.

விருச்சிகம்: சில காரியங்களை நிறைவேற்றுவதில் பொறுமையை கையாளுங்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை.. மாலை முதல் தடைகள் விலகும்.

தனுசு: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீ்ர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். ஆனால் எதிலும் எச்சரிக்கை தேவை.

மகரம்: வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

கும்பம்: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

மீனம்: கடனை தீர்க்கும் வழிகளை யோசிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். பண பற்றாக்குறை நீங்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்