இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு உண்டு.

ரிஷபம்: செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். சொந்தபந்தங்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். விஐபிகளால் ஆதாயம் கிடைக்கும். சுபச் செலவுகள் வரும். திடீர் பயணம் ஏற்படலாம்.

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணப்புழக்கம் கணிசமாக உயரும் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படும்.

விருச்சிகம்: நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். தடைபட்ட திருமணம் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம் உண்டாகும். வீடு, மனை வாங்கும் காலம் கனிந்து வரும்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலகியிருந்த சொந்தம்பந்தங்கள் தேடி வருவார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைவரும் ஏற்கும்படி இருக்கும்.

மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நீண்டநாள் கனவு நினைவாகும். வீட்டை ரசனைக்கேற்ப மாற்றுவீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பணவரவு திருப்தி தரும்.

மீனம்: மூத்த சகோதரர் வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்