மேஷம்: சுப செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும். குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். மாலை முதல் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.
மிதுனம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்: சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாக செயல்பட்டு முடிப்பீர்கள். விஐபிகள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அடிக்கடி செலவுவைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.
சிம்மம்: உறவினர்களுடன் எதிர்பாராது கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாலை முதல் வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.
கன்னி: எத்தனை தடைகள் வந்தாலும் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் திருப்தி ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது..
துலாம்: எதையும் சாதிப்போம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்த்தவர்கள் உங்களிடம் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள். மூத்த சகோதரரால் சில காரியங்கள் நிறைவேறும்.
விருச்சிகம்: வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு: இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனம் செலவு வைக்கும்.
மகரம்: மனைவியின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
கும்பம்: அனைத்து பிரச்சினைகளையும் சமாளிக்கும் மனோதைரியம் உண்டாகும். பழைய இனிமையான நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
மீனம்: கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். மாலை முதல் குடும்பத்தில் குதூகலமான நிலை காணப்படும்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago