மேஷம்: வீண் அலைச்சல் ஏற்படும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்கள் இழுபறிக்குப் பின்னர் முடியும். கணவன் - மனைவி இடையே மனத்தாங்கல் ஏற்படலாம்.
ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.. தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப்படும். பணவரவு உண்டு.
மிதுனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைபடி சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
கடகம்: தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் இன்று முழுமையடையும். விஐபிகளின் ஆதரவு கிட்டும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.
சிம்மம்: வீண் அலைச்சல், பணத் தட்டுப்பாடு வரக்கூடும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். மருத்துவச் செலவுகள், வீண்பழிகள் வந்து நீங்கும். வாகனம் செலவு வைக்கும்.
கன்னி: பால்ய நண்பர்களால் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளுக்கு புதிய ஆடை ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள். திடீர் பயணம் உண்டாகும்.
துலாம்: பிரபலமானவர்களின் நட்பு கிட்டும். விலகியிருந்த சகோதர, சகோதரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு நெருக்கமாவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
தனுசு: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பால்ய நண்பர் தேடி வருவார். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள். வீடு, மனை வாங்கவது குறித்து யோசிப்பீர்கள்.
மகரம்: நேர்மறை எண்ணம் பிறக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். மூத்த சகோதரர் வகையில் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும்.
கும்பம்: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.. முக்கிய காரியங்களில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
மீனம்: எந்தக் காரியத்தையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் இணக்கமாக செல்லுங்கள். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago