மேஷம்: உங்களின் முயற்சிகளுக்கு விஐபிகள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் வரும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
ரிஷபம்: பிரச்சினைகள், சிக்கல்களை தீர்க்க நண்பர்களின் ஆலோசனைகளும், உதவியும் கிடைக்கும். தீடீர் பணவரவு உண்டு. கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
மிதுனம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் சேரும்.
கடகம்: மனதில் தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். திட்டவட்டமாக, தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள்.
சிம்மம்: விலை உயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் வாங்க திட்டமிடுவீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
கன்னி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
துலாம்: பேச்சில் நிதானம் அவசியம். சொல்ல வருவதை நாசூக்காகவும், மென்மையாகவும் எடுத்துச் சொல்லுங்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.
விருச்சிகம்: பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேறு வீட்டுக்கு குடிபுகுவது பற்றி ஆலோசிப்பீர்கள்.
தனுசு: தடைகள், தாமதங்கள் ஏற்பட்டாலும், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப சீர் செய்வீர்கள்.
மகரம்: விலகியிருந்த பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். உறவினர்கள் உங்கள் ஆலோசனையை எதிர்பார்ப்பார்கள்.. பூர்வீக சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும்.
கும்பம்: வேலைச்சுமை குறையும். வழக்குகள் சாதகமாகும். ஆரோக்கியம் மேம்படும். புத்துணர்சசியுடன் காணப்படுவீர்கள். பெற்றோருடன் இருந்துவந்த மனத்தாங்கல் விலகும். பணவரவு உண்டு.
மீனம்: வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.. வீடு பராமரிப்பு செலவும் அதிகரிக்கும். முக்கிய கோப்புகளை கையாள்வதில் கவனம் தேவை. அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago