மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும்.
ரிஷபம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முக்கிய வேலையில் இருந்த பின்னடைவு நீங்கும். எடுத்த காரியத்தை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.
மிதுனம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். மூத்த சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.
கடகம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைக்க முயற்சிப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சிம்மம்: வேலைகளை உடனுக்குடன் முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். எதிர்மறை விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம்.
கன்னி: அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மருத்துவச் செலவு ஏற்படக் கூடும்.
துலாம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்..
தனுசு: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
மகரம்: எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.
கும்பம்: அதிரடியாகத் திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் உங்களை தேடிவந்து உதவி கேட்பார்கள். கடன் பிரச்சினைகளை தீர்க்க வழி பிறக்கும்.
மீனம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் திடீரென முடியும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago