இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். முக்கிய விஷயங்களில் நிதானத்துடன் செயல்படுங்கள்.

ரிஷபம்: உங்கள் செயல்பாடுகளில் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் குழப்பங்கள் நீங்கி அமைதியான சூழல் நிலவும்.

மிதுனம்: பழைய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். திடீர் பயணம் உண்டு.

கடகம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.

சிம்மம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: காரியத் தடை, தடுமாற்றம் நீங்கும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள்.

துலாம்: எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவ்வப்போது மனதை வாட்டும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனியுங்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: அநாவசிய செலவு, அலைச்சல் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்து வீட்டாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

தனுசு: காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும்.

மகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் திடீரென முடியும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

மீனம்: மனசஞ்சலம், பதற்றத்துடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். உதவுவதாக வாக்கு கொடுத்த உறவினர்கள் நழுவி விடுவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்