மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள்.
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். நேர்மறை சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள்.
மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். மனதில் நிலவிய குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள்
கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி அடைவீர்கள். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் யோசிப்பீ்ர்கள்.
» சிவகுமார், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு... 100வது படங்களுக்கு இளையராஜாதான் இசை!
சிம்மம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மூத்த சகோதரரால் சில காரியங்கள் நிறைவேறும்.
கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
துலாம்: ஒருவித பதற்றம் வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை ஏற்படக்கூடும். தாழ்வுமனப்பான்மை மீண்டும் தலைதூக்கும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். யாரையும் அநாவசியமாக பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். பணப் பற்றாக்குறை நீடிக்கும்.
தனுசு: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராக அமையும்.
மகரம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று சுமுகமாக முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிப்பு உயரும். உங்களின் செயலில் புத்திசாலித்தனம் வெளிப்படும்.
கும்பம்: வீண்செலவுகளைத் தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சகோதரர் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
மீனம்: எந்த காரியத்தைத் தொட்டாலும் பலமுறை முயன்று முடிக்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். கலைப்பொருட்கள் சேரும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago