இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: சகோதரர்களால் சில காரியங்கள் நிறைவேறும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து ஆலோசிப்பீர்கள். அநாவசிய செலவுகளைக் குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும்.

கடகம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு.

சிம்மம்: சாதுர்யமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், .உதவியும் கிடைக்கும்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களின் நல்ல மனதைப் புரிந்து கொள்வார்கள்.

துலாம்: நான்கைந்து வேலைகளை ஒரே நாளில் முடிக்க வேண்டி வரும். ஒருவித டென்ஷன், படபடப்பு நீடிக்கும். குடும்பச் சூழ்நிலை அறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

விருச்சிகம்: தேவையற்ற அலைச்சல்கள், பண விரயம் ஏற்படும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அடுத்தடுத்த செலவுகளால் பிறரிடம் கடன் வாங்க வேண்டி வரும்.

தனுசு: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். பொதுக் காரியங்களில் மனமுவந்து ஈடுபடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.

மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். நீண்டநாள் விலகியிருந்த உறவினர், நண்பரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: உங்களின் முயற்சிக்கு குடும்பத்தாரின் ஆதரவு உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.

மீனம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். வாகனம் செலவு வைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்