இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு காரியங்களில் வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகி நிம்மதி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தைவழி உறவினர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள்.

மிதுனம்: குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்: நீண்டநாட்களாக மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. பிள்ளைகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: காரியங்களை முடிப்பதில் இருந்துவந்த தடுமாற்ற நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குடும்ப சூழ்நிலை அறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கன்னி: வேலைச்சுமை இருந்து கொண்டே இருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள். உறவினர் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.

துலாம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன், உத்தரவாதம் கையெழுத்திட வேண்டாம்.

விருச்சிகம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.

தனுசு: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் பணம் தேவையான அளவு இருக்கும்.

மகரம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்கள் மீது அக்கறை கொண்ட நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.

கும்பம்: உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்.

மீனம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் - மனைவி இடையே நிலவிய பனிப்போர் நீங்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்