இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். அவ்வப்போது அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

மிதுனம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

கடகம்: நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். உடல்நிலை சீராகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

சிம்மம்: வேலைகளை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.

கன்னி: தேவையற்ற அலைச்சல், செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும்.

துலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். விலகியிருந்த நெருங்கிய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் முன்னின்று ஈடுபடுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

தனுசு: வழக்கில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

மகரம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கும்பம்: நல்ல வாய்ப்புகள் தேடிவரும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்