மேஷம்: வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். தாய்வழி உறவுகளால் மனக்கசப்புகள் வரக்கூடும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் வரும்.
ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். தோல்வி பயம் நீங்கும். சகோதரி உதவுவார். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.
மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கடகம்: எதற்கெடுத்தாலும் கோபப்படுவீர்கள். கைவிட்டுப்போன நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். யாருக்கும் உத்தரவாதமோ, உறுதிமொழியோ தரவேண்டாம்.
» கடன் தொல்லை தீரும்; புதன்கிழமையில் வராஹி வழிபாடு! எந்தக் கிழமையில் வணங்கினால் என்னென்ன பலன்கள்?
» தடைகளைத் தகர்ப்பாள் வராஹி தேவி; பஞ்சமி திதியில் வராஹி வழிபாடு
சிம்மம்: நீண்டநாள் பழகிய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வழக்குகளில் எச்சரிக்கையுடன் இருங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்னச் சின்ன தடைகள் வரக்கூடும்.
கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
துலாம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த திட்டமிடுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
விருச்சிகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடனை பைசல் செய்வதற்கு வழி பிறக்கும். குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல், குழப்பம் நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும்.
தனுசு: வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்திக்கு மீறி எந்த உறுதிமொழியும் யாருக்கும் தர வேண்டாம். அடுத்தடுத்த செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள்.
மகரம்: சமயோசித புத்தியால் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். எதார்த்தமாகவும், சாதுர்யமாகவும் பேசி எல்லோருடைய மனதிலும் இடம் பிடிப்பீர்கள். பணவரவு உண்டு.
கும்பம்: இழுபறியான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வருவார்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்: முன்கோபம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நெருங்கிய நண்பரை நீண்ட நாளைக்குப் பிறகு சந்தித்து மகிழ்வீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago