மேஷம்: வாகனத்தில் செல்லும்போது, சாலையைக் கடக்கும்போது கவனம் தேவை. விஐபி.க்களிடம் அளவுடன் பழகுங்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும் நிலை ஏற்படக்கூடும்.
ரிஷபம்: அநாவசிய செலவுகளை குறையுங்கள். நீண்டநாட்களாக செல்ல நினைத்த புண்ணிய தலங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.
மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். மனஉளைச்சல், அநாவசிய செலவு ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் இழுபறியாகும்.
கடகம்: உங்களின் சாதுர்யம் வெளிப்படும். காரியத்தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
சிம்மம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டகால கடன் பிரச்சினைகளைத் தீர்க்க வழி பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.
கன்னி: உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு திட்டமிட்டதைவிட அதிகரிக்கும்.
துலாம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். எதையும் புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள்.
விருச்சிகம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிநாட்டில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
தனுசு: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பழைய வீட்டை இடித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபடுவீரகள். எதிரிகளை சாமர்த்தியமாக வீழ்த்துவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
மகரம்: செயலில் வேகம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்கு குடிபுகுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மனநிறைவுடன் காணப்படுவீர்கள்.
கும்பம்: கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தடைபட்டிருந்த கட்டுமானப் பணிகள் திடீர் வேகமெடுக்கும்.
மீனம்: சாதுர்யமாகப் பேசி பல வேலைகளையும் முடிப்பீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சோர்வு, உடல் வலி ஏற்படக் கூடும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago