மேஷம்: நீண்டகால கடனை பைசல் செய்வீர்கள். சுபகாரியங்களால் செலவுகள் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை மளமளவென்று முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பனிப்போர் மறையும். வீடு வாங்க, கட்ட வங்கிக்கடன் கிடைக்கும்.
மிதுனம்: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
கடகம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிட்டும். குடும்பத்தில் குதூகலமான நிலை காணப்படும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.
சிம்மம்: வேலைச்சுமை, பதற்றம் அதிகரிக்கும். நண்பர்களுடன் எதிர்பாராத வகையில் கருத்துமோதல் ஏற்படக்கூடும். சொந்தபந்தங்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். வாகனம் செலவு வைக்கும்.
கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும் பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். மனைவிவழியில் உதவி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
துலாம்: தன்னம்பிக்கை துளிர்விடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகளின் தவறைச் சுட்டிக் காட்டி திருத்துவீர்கள். அடுத்தடுத்த செலவுகளால் சேமிப்பு கரையும்.
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் பெருமையடைவீர்கள்.
தனுசு: நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள் மீண்டும் தொடர்பு கொள்வார்கள் ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும்.
மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
கும்பம்: உங்களின் செயல்பாடுகளில் புத்திசாலித்தனம் வெளிப்படும். பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசி முடிப்பீர்கள். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
மீனம்: புதியவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago