இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: இழுபறியாக இருந்துவந்த வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சில குழப்பங்களுக்கு உங்களின் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.

ரிஷபம்: முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் நட்பும், உதவியும் கிடைக்கும்-. பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். மகளின் திருமண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்: எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சாதுர்யமாகச் செயல்பட்டு காரியங்களை கச்சிதமாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் பெருமை உண்டு. பணவரவு உண்டு.

கடகம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். பிள்ளைகளின் திறமைகளை ஊக்குவிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: வீண் சந்தேகம், பண விரயம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தரவேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்.

கன்னி: காரியத்தடைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக விலகியிருந்த சொந்தபந்தங்கள் மீண்டும் தொடர்பு கொள்வார்கள்.

துலாம்: மனதில் நிலவிவந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

விருச்சிகம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

தனுசு: தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். பேச்சில் சாதுர்யம் வெளிப்படும்.. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

மகரம்: ஓரளவு பணம் வரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். அநாவசிய செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும்.

கும்பம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்: வருங்காலத்தைப் பற்றிய கவலைகள் அடிக்கடி தொல்லை கொடுக்கும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்