மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு காரியங்களில் வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பெரிய பதவி, பொறுப்பு தேடி வரும். கலைப்பொருட்கள் சேரும்.
மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டகால கடன் பிரச்சினையைத் தீர்க்க வழி பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.
கடகம்: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. மின்சாதனங்கள் பழுதாகும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாதீர்கள்.
» ’நண்பன், சகோதரன், நல்லாசிரியன்... பாலகுமாரன்!’ - எழுத்தாளர் பாலகுமாரன் நினைவுநாள்
» கோடரியிலும்... பூ பூக்கும்! - எழுத்தாளர் பாலகுமாரன் நினைவுநாள்
சிம்மம்: தீர்க்கமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு.
கன்னி: தடை, தாமதங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். விஐபி.க்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மனதில் புத்துணர்ச்சி காணப்படும். பணவரவு திருப்தி தரும்.
துலாம்: உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். புது வீடு, மனை வாங்குவதற்குரிய சூழல் கனிந்து வரும். கலை, இசையில் ஈடுபாடு அதிகரிக்கும்.
விருச்சிகம்: நெடுநாட்களாகத் திட்டமிட்ட காரியம் இப்போது கைகூடி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த நகைகள் வாங்க திட்டமிடுவீர்கள்.
தனுசு: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடு நீங்கும். வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சாதகமான பதில் வரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள்.
மகரம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். விஐபி.க்களுடன் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். பிள்ளைகளின் கூடாப் பழக்கம் விலகும்.
கும்பம்: வீண் பகை, பண விரயம், முன்கோபம் வந்து செல்லும். அரசாங்க அதிகாரிகளை அநாவசியமாக பகைத்து கொள்ளாதீர்கள். அக்கம்பக்கத்தினரின் தொந்தரவு அதிகரிக்கும்.
மீனம்: வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. உறவினர்கள், நண்பர்களின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago