இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்ற முயற்சிப்பீர்கள். விஐபி.கள் அறிமுகமாவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி பிறக்கும்.

மிதுனம்: உறவினர்களுடன் இருந்துவந்த பகை மறையும். வேலைச்சுமையும், பொறுப்புகளும் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பண வரவு உண்டு.

கடகம்: ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும். அரைகுறையாக நின்றுபோன பல காரியங்களை விரைந்து முடியும்.

சிம்மம்: மனதில் உற்சாகம் பொங்கும். பிரபலமான ஒருவரின் நட்பும், ஆலோசனையும் கிடைக்கும்.. வழக்கு சாதகமாகும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதம் நீங்கும்.

கன்னி: பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மத்தியில் மதிப்பு உயரும். உறவினர் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள்.

துலாம்: எங்கு சென்றாலும் மறைமுக எதிர்ப்புகளை சந்திக்கும் சூழல் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

விருச்சிகம்: நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி பிறக்கும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு: எல்லா பிரச்சினைகளையும் சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் ஆலோசனையை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள்.

மகரம்: மற்றவர்கள் உங்களைப் பற்றி குறைவாகவும், தாழ்வாகவும் நினைப்பதாக எண்ணி வருந்துவீர்கள். பிள்ளைகளின் உயர் கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் வந்து நீங்கும்.

கும்பம்: வறட்டு கவுரவத்துக்காக சேமிப்பை கரைக்காதீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். பழைய சொந்தபந்தங்கள் திடீரென தொடர்பு கொள்வார்கள்.

மீனம்: பழைய இனிமையான சம்பவங்கள் அடிக்கடி நினைவுக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சமயோசிதமாகச் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்