இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வீட்டில் உற்சாகம் பொங்கும். அடகு வைத்திருந்த நகை, பொருட்களை மீட்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: அடுத்தடுத்த செலவுகளால் கையிருப்பு கரையும். மனதில் சஞ்சலம் நிலவும். வீண் அலைச்சல், பணவிரயம் ஏற்படக் கூடும். உடன்பிறந்தவர்கள் குறைபட்டு கொள்வார்கள்.

மிதுனம்: கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும் வீடு, வாகனம் வாங்கும் யோகம் கூடிவரும். பழுதான மின்சாதனங்களை மாற்றுவீர்கள். திருமண காரியம் கூடி வரும்.

கடகம்: தயக்கம், தடுமாற்றம், பயம் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றியமைக்க திட்டமிடுவீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு மாறும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் ஆலோசனையை ஏற்பார்கள். யாரிடத்தில் எப்படி பேச வேண்டும் என்ற தெளிவு, பக்குவம் பெறுவீர்கள்.

கன்னி: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தோற்றப்பொலிவு கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. விஐபிகளின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.

துலாம்: பிரச்சினைகளைக் கண்டு கலங்க மாட்டீர்கள். அரசியல் பிரமுகர் தக்க சமயத்தில் உதவுவார். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் உண்டாகும்.

விருச்சிகம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.. வீட்டில் கலகலப்பான சூழல் காணப்படும். விலை உயர்ந்த மின்னணு சாதனம் வாங்க திட்டமிடுவீர்கள்.

தனுசு: குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள், வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க வைக்க முடியவில்லையே என்ற ஏற்படக் கூடும்.

மகரம்: அடுத்தடுத்த செலவுகளை சமாளிக்க முடியாமல் பிறரிடம் கடன் வாங்கும் சூழல் உண்டாகும். சகோதரருடன் ஈகோ பிரச்சினை ஏற்படும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள்.

மீனம்: நேர்மறை சிந்தனைகள் மனதில் தோன்றும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்