இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: முக்கிய முடிவுகளை இப்போது எடுக்க வேண்டாம். சகோதரர் வகையில் வீண் அலைச்சலும், செலவினங்களும் ஏற்படக் கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும்.

ரிஷபம்: வெளியூரில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்விக்கும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். கலை, இசை இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்: சவால்கள், எதிர்ப்புகளை சாமர்த்தியமாக எதிர்கொண்டு முன்னேறுவீர்கள். தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்களையும் முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள்.

கடகம்: எதிர்காலத்துக்கென புது திட்டங்களை தீட்டுவீர்கள். பிரபலங்களின் துணையுடன் சில காரியங்களை செய்து முடிப் பீர்கள். பழைய கடனை பைசல் செய்ய வழிபிறக்கும்.

சிம்மம்: தடைபட்ட வேலைகள் முழுமையடையும். பால்ய நண்பர் களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். முக்கிய முடிவுகளை துணிச்ச லுடன் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். பணவரவு திருப்திகராக இருக்கும்.

துலாம்: எதிர்காலத் திட்டங்களைப் பற்றி யோசிப்பீர்கள். வரவேண் டிய இடத்திலிருந்து பணம் வரும். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் நிதானமுடன் செயல்படுங்கள். கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

தனுசு: குடும்ப ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

மகரம்: பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள்.

கும்பம்: மனதில் குதூகலம் பிறக்கும். பிள்ளைகளின் திறமை களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள். குடும்பத்தில் நீடித்துவந்த பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.

மீனம்: சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பழைய சொத்துப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்