இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகி நிம்மதி கிட்டும். குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்: குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள்.

கடகம்: நீண்டநாளாக மனதில் நீடித்து வந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வீட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வேற்று மதத்தவர் தக்க சமயத்தில் உதவுவார்.

சிம்மம்: காரியங்களை முடிப்பதில் இருந்துவந்த தடுமாற்ற நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குடும்பச் சூழ்நிலை அறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கன்னி: வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள். சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.

துலாம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் இருக்கும். யாருக்காகவும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம்.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் பரபரப்புடன் காணப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து எளிமையாக வாழ விரும்புவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

தனுசு: பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

மகரம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

கும்பம்: உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்.

மீனம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலம் நெருங்கி வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்