இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி வரும். நண்பர்களின் ஆதரவு உண்டு.

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.

மிதுனம்: புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பீர்கள்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து திட்டமிடுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது பற்றி ஆலோசிப்பீர்கள்.

சிம்மம்: அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த வேலைகள் திடீரென முடியும்.

கன்னி: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சோர்வு, ஒருவித பதற்றம் ஏற்படக் கூடும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பணவரவு உண்டு.

தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். முக்கியப் பிரமுகருடன் திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

மகரம்: பிரச்சினைகளின் ஆனிவேரை கண்டறிந்து தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம்: எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலித்து விடுவீர்கள்.

மீனம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்