இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

ரிஷபம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் காரியங்களிலிருந்த தடை, தாமதங்கள் நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். எடுத்த காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும்.. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிம்மம்: சில வேலைகளை நினைத்தபடி முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம்.

கன்னி: அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

துலாம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்துசேரும். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும்.

விருச்சிகம்: அடிமனதில் இருந்துவந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிலவும். உறவினர்கள், நண்பர்களுடன் நீண்ட நாட்களுக்குப் பின் மனம்விட்டு பேசுவீர்கள்.

மகரம்: எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியது வரும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். நீண்டகால கடன் பிரச்சினைகளை தீர்க்க வழி கிடைக்கும்.

மீனம் : முகப்பொலிவு கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்