இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கடந்தகால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும்.

ரிஷபம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்துவந்த கருத்து மோதல்கள் விலகும். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.

மிதுனம்: சில நேரங்களில் மனம் அமைதியற்று காணப்படும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். வெளியிடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

கடகம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டியது வரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு டென்ஷனை ஏற்படுத்தும். அவசர முடிவுகள் இப்போது எடுக்க வேண்டாம்.

சிம்மம்: நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். இளமைக்கால நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள்.

கன்னி: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். நாவல்கள், புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் கருத்தொற்றுமை ஏற்படும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய திட்டமிடுவீர்கள். வாகனம் எதிர்பாராது செலவு வைக்கும்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் இழுபறிக்குப் பின்னர் முடியும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். எதிலும் நிதானித்து செயல்படுவது நல்லது.

தனுசு: மன உளைச்சல் நீங்கும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மோதல் போக்கு நீங்கும்.. நகைச்சுவையாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மகரம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும்.

கும்பம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். பால்ய நண்பர்கள் தொடர்பு கொள்வார்கள்.

மீனம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சிக்கலான காரியங்களையும் சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். மனைவிவழி உறவினர்களின் உதவி கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்