மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதுகலமான சூழல் உருவாகும். எடுத்த காரியங்களை சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். பணவரவு உண்டு.
ரிஷபம்: கனவுத் தொல்லையால் தூக்கம் கெடும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது கோபப்படுவீர்கள். பணம், விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
மிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். உறவினர், நண்பர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். கணவன் - மனைவிக்குள் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படக்கூடும். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்க திட்டமிடுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பழைய நினைவுகளால் உற்சாகம் பொங்கும்.
» அட்சய திருதியை; கிருஷ்ணருக்கு அவல் பாயசம்; நான்குபேருக்கேனும் தயிர்சாதம்!
» குடை, சாதம், போர்வை, விசிறி, செருப்பு,ஆடை; ‘அட்சய திருதியை’யில் ஏதேனும் தானம் செய்யுங்கள்!
சிம்மம்: அழகு, இளமை கூடும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சிக்கலான பிரச்சினைகளையும் தீர்க்கும் சாதுர்யம் உண்டாகும்.
கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். வருமானத்தை உயர்த்த வழி பிறக்கும். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வரக்கூடும்.
துலாம்: பிள்ளைகளுடன் வாக்குவாதம் வரும். அவர்களின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாகனம் பழுதாகி சரியாகும்.
விருச்சிகம்: கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களின் தொடர்பால் உற்சாகமடைவீர்கள்.
தனுசு: அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருந்துவந்த மோதல் போக்கு நீங்கும். உடன்பிறந்தோரிடம் மனம்விட்டுப் பேசி முடிவுகள் எடுப்பீர்கள். வெளியூரில் இருந்து நல்ல தகவல் வரும்.
மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் புண்ணிய தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.
கும்பம்: மனக்குழப்பம், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து ஆலோசிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.
மீனம்: மகளுக்கு எதிர்பார்த்த நல்ல இடத்தில் வரன் அமையும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago