மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் மளமளவென்று முடியும்.
ரிஷபம்: எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். முன்கோபத்தால் நல்ல நண்பரின் நட்பை இழப்பீர்கள்.
மிதுனம்: பிள்ளைகளின் செயல்பாடுகள் டென்ஷனை அதிகரிக்கும். திடீர் சோர்வு, பதற்றம் ஏற்படக் கூடும். அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் தனித்திறமைகளை ஊக்குவிப்பீர்கள்.
சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பணவரவு உண்டு.
கன்னி: தயக்கம், காரியத் தடை யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு.
துலாம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள்.
விருச்சிகம்: தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும்.
தனுசு: பழைய உறவினர்கள், நண்பர்கள் திடீரென தொடர்பு கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான சூழல் காணப்படும். வேற்றுமதத்தவர் தக்க சமயத்தில் உதவுவார்.
மகரம்: கனவுகள் நனவாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய இனிய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள்.
கும்பம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்துமோதல்கள் வரக்கூடும். வீட்டை மாற்றியமைக்க திட்டமிடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
மீனம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago