மேஷம்: சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம்.
ரிஷபம்: சகோதரர் வகையில் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். ரத்த அழுத்தத்தை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவி இடையே ஈகோ பிரச்சினை ஏற்படக் கூடும்.
மிதுனம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள்.
கடகம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.
சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன், சாதுர்யம் வெளிப்படும். முன்கோபம் விலகும். கணவன் - மனைவி இடையே நிலவிய மோதல் போக்கு நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி: வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கடன் பிரச்சினையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுவது பிரச்சினைகளை தவிர்க்கும்.
துலாம்: மனப் போராட்டங்கள், குழப்பங்கள் முடிவுக்கு வரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
விருச்சிகம்: மறைமுக எதிரிகளை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்ட திட்டமிடுவீர்கள்.
தனுசு: திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
மகரம்: பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கும்பம்: முன்கோபம், பதற்றம் குறையும். தடைபட்ட அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்ல காத்திருந்தவருக்கு நல்ல தகவல் வரும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வரும்.
மீனம்: உங்களின் முயற்சிகளுக்கு தாயாரின் ஆதரவு கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் நற்பணிகளுக்கு நன்கொடை வழங்குவீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago