இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பல வேலைகள் நீண்ட இழுபறிக்குப் பின்னர் முடியும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அரசு காரியங்கள் தாமதமாகும்.

ரிஷபம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வாகனத்தை சரி செய்வீர்கள். புண்ணிய தலங்கள் சென்றுவர திட்டமிடுவீர்கள். கணவன் – மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.

கடகம்: குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

சிம்மம்: முக்கிய முடிவுகளை இப்போது எடுக்க வேண்டாம். எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள்கூட இழுபறியாகும். பெற்றோருடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பணத் தட்டுப்பாடு ஏற்படலாம்.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. பிரார்த்தனைகளை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்ற முயற்சிப்பீர்கள்.

விருச்சிகம்: பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக விலகியிருந்த நண்பர் உங்களை தொடர்பு கொள்வார். வெளியூரில் இருந்து சுபச் செய்திகள் வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும்.

தனுசு: பழைய சிக்கல்கள் தீரும். தாய்வழி உறவுகளுடன் கருத்துமோதல் வரக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வாகன வசதி பெருகும். உங்களின் முயற்சிகளுக்கு பெற்றோரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.

கும்பம்: குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். சகோதரர்களிடம் நிலவிய கருத்து வேறுபாடு நீங்கும். பணவரவு உண்டு.

மீனம்: புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். கணவன் - மனைவிக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்