மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். புது வீடு, மனை வாங்குவது குறித்து திட்டமிடுவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் அடைவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: சாதுர்யமாகச் செயல்பட்டு காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.. மனக்குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும்.
மிதுனம்: அனுபவ அறிவால் சிக்கலான காரியங்களையும் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
கடகம்: சிறுசிறு அவமானம், வீண் செலவுகள் வந்து போகும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, ஜாமீன் தரவோ வேண்டாம். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவுடன் பழகுங்கள்.
சிம்மம்: மனோபலம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து ஆலோசிப்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.
கன்னி: எதிர்பார்ப்புகள் மளமளவென்று பூர்த்தியாகும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள்.
துலாம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசியும் ஆதரவும் கிட்டும்.
விருச்சிகம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். ஓரளவு பண வரவும் உண்டு. குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர்கள்.
தனுசு: குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் செல்வதற்கு திட்டமிடுவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.. வேற்றுமொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள்.
மகரம்: உங்கள் பேச்சில் கனிவு கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
கும்பம்: வேலைச்சுமை, நண்பர்களுடன் எதிர்பாராத நெருடல் வந்து நீங்கும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.
மீனம்: வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை யாருக்கும் இரவல் தர வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago