இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். அனைத்து காரியங்களும் தடையின்றி முடியும்.


ரிஷபம்: திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கவுரவிக்கப்படுவீர்கள்.


மிதுனம்: அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபரிடம் சொல்லி கொண்டி ருக்காதீர்கள். வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.


கடகம்: மனதில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். பழுதான பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்க திட்டமிடுவீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும்.


சிம்மம்: எந்த தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சாமர்த்தியமாக சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். விஐபிக்களால் சில வேலைகளை முடிவடையும். பணவரவு திருப்தி தரும்.


கன்னி: எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.


துலாம்: வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் – மனைவி இடையே நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.


விருச்சிகம்: சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்களின் முயற்சிகளுக்கு தாயாரின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.


தனுசு: எதிர்பார்ப்புகள் தடையின்றி பூர்த்தியாகும். கையில் பணம் தாராளமாக புழங்கும். புது வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.


மகரம்: தாழ்வுமனப்பான்மை அடிக்கடி தலைதூக்கும். யாரை நம்புவது என்பதில் குழப்பம் ஏற்படும். காசோலைகள், பணத்தை கவனமுடன் கையாளுங்கள். வாகனம் செலவு வைக்கும்.


கும்பம்: வேலைச்சுமையால் சோர்வுடன் காணப்படுவீர்கள். எந்த காரியத்தை தொட்டாலும் இழுபறிக்கு பின்னரே முடியும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக முடிப்பது நல்லது.


மீனம்: மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். கலைப்பொருட்கள் சேரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்