மேஷம்: மறதியால் தேவையற்ற பிரச்சினைகள் வரும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமே என்ற படபடப்பு வந்து நீங்கும்.
ரிஷபம்: விரும்பிய காரியத்தை நம்பிக்கை, உற்சாகத்துடன் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை உயரும். மனைவி வழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
மிதுனம்: வெளி வட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். பழைய சிக்கல்கள் தீரும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.
கடகம்: முக்கிய வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர் களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். குடும்பத்துடன் சென்று நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்: விட்டுக்கொடுத்து சில வேலைகளை முடிப்பீர்கள். புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரித்தாலும். பணவரவும் உண்டு.
கன்னி: போட்டி, சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு, வங்கி வகையிலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டாகும். பேச்சில் பொறுமை தேவை.
துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூல மும் உண்டு. எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள், கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.
விருச்சிகம்: இனம்தெரியாத அச்சம், கவலைகள் வந்து நீங்கும். வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று நினைப்பீர் கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. பொருட்கள் சேரும்.
தனுசு: வாகனப் பயணத்தின்போது அதிக கவனம் அவசியம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. சகோதர வகையில் சங்கடங்கள், மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். கடன் பிரச்சினை தீரும்.
மகரம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். தாய்வழி உற வினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொது காரியங்களை சிறப் பாக முடித்து பாராட்டு பெறுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும்.
கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.
மீனம்: இழுபறியாக உள்ள பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago