இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். ஆடம்பர செலவைக் குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

ரிஷபம்: காரியத் தடைகள், அலைச்சல் வந்து போகும். குடும்பத்தினரால் வீண் செலவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மிதுனம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பர். பதவிகள் தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

கடகம்: இல்லத்தில் அடிப்படை வசதிகள் பெருகும். பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: தாமதப்பட்ட திருமணம் கைகூடி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பூர்வீக வீட்டை அதிக செலவு செய்து சீரமைப்பீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கன்னி: நினைத்த காரியம் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர். தம்பதிக்குள் இருந்த கசப்புகள் விலகும். வீண் அலைச்சல் குறையும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

துலாம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அலுவலகரீதியான பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு. தம்பதிக்குள் மனம்விட்டு பேசி பிரச்சினைகளை சமாளிப்பீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்லது.

தனுசு: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். சரக்குகள் விற்பனையாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

மகரம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்த சங்கடங்கள் நீங்கும். குடும்ப வருமானத்தை பெருக்க வழி கிட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: பழைய நல்ல நினைவுகளை நினைத்து அசை போடுவீர். சுற்றியிருப்பவர்கள் உங்களிடம் அன்பாக இருப்பர். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் ஏற்றம் தரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

மேலும்