மேஷம்: விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி அன்யோன்யம் ஏற்படும். வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ரிஷபம்: நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வீண் அலைச்சல் குறையும். வியாபாரரீதியாக புதிய முயற்சிகளை மேற்கொள்வீ்ர்கள். விருந்தினர் வருகை உண்டு.
மிதுனம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உயர் பதவி, பொறுப்பு தேடி வரும். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைப்பொருட்கள் சேரும்.
கடகம்: குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். அடிப்படை வசதிகள் பெருகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
» காங்கிரஸ் - பாஜக எம்.பி.க்கள் மோதலால் நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றம்: நடந்தது என்ன?
» தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை வேடிக்கை பார்ப்பதா?
சிம்மம்: உடல்சோர்வு, அலைச்சல் வந்து போகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வீண் செலவுகள் ஏற்படும்.
கன்னி: தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். ஓரளவு பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.
துலாம்: எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும்.
தனுசு: இங்கிதமாகபேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். முகப்பொலிவு கூடும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.
மகரம்: காரியத்தடைகள், அலைச்சல் ஏற்படும். குடும்பத்தினரால் கையிருப்புகள் கரையக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் தொந்தரவு உண்டு. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
கும்பம்: கடந்தகால இனிய சம்பவங்களை அவ்வப் போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களிடம் அன்பாக இருப்பார்கள். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.
மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago