இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். குடும் பத்தினரின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் வரும். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

ரிஷபம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பண புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பு மலரும். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.

மிதுனம்: உடல்சோர்வு, வயிற்று பிரச்சினைகள் வந்து போகும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: பண பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலை களை செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு தந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

கன்னி: அலைச்சல், சோர்வு, கோபம் குறையும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். வாகன பயணத்தில் கவனம் தேவை. பொருட்கள் சேரும்.

துலாம்: ஏற்கெனவே செய்த உதவிக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.

விருச்சிகம்: சின்ன சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். எனவே, பேச்சில் அதிக பொறுமை, நிதானம் அவசியம். ஆன்மிக நாட்டம் கூடும்.

தனுசு: அச்சம், கவலை, தடுமாற்றம் நீங்கும். எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்தை மாற்றி அமைப்பீர்கள். அலு வலகத்தில் பணிகள் விரைந்து முடியும்.

மகரம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப் பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வராது என்று நினைத்த பழைய பாக்கிகள் வரும்.

மீனம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். சேமிப்புகள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மரியாதை கூடும். குலதெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரம் திருப்தி தரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்