மேஷம்: திடீர் பயணங்கள் அலைச்சல் தரும். எடுத்த வேலையை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர் கிடைப்பார். உத்தியோகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் உண்டு.
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: தம்பதிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். உத்தியோகத்தில் மேலதிகாரி முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்.
» முதல்வர் ஸ்டாலினுக்கு கேரளாவில் உற்சாக வரவேற்பு: வைக்கம் பெரியார் நினைவகத்தை இன்று திறக்கிறார்
சிம்மம்: திடீர் திருப்பம் உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரவாக இருப்பார். வர வேண்டிய பாக்கிகள் வரும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
கன்னி: பேச்சில் நிதானம் தேவை. தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வாகனப் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம்.
துலாம்: சொந்த ஊரில், விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். கையில் பணம் புரளும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். பழைய நண்பர்களை சந்திப்பீர். வியாபாரரீதியாக திடீர் பயணம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பணவரவு உண்டு. எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீர். தொழிலில் போட்டிகள் குறையும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் இருக்கும்.
மகரம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்து வந்த கருத்துமோதல் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பீர்.
கும்பம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். கையில் பணம் புரளும். பிரபலங்களை சந்திப்பதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகப் பிரச்சினை விலகும்.
மீனம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். உறவினர்களுடன் இணக்கமாகச் செல்லவும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago