இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: சாணக்கியத்தனமாக பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவர். வியாபாரத்தில் பழைய சரக்கு விற்றுத் தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றமுண்டு.

ரிஷபம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரம் சிறக்கும்.

மிதுனம்: மனதில் இருந்த பயம் விலகும். திடீர் பண வரவு, செல்வாக்கு உண்டு. பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கடகம்: பேச்சில் கவனம் தேவை. முடிவெடுப்பதில் தடுமாற்றம் வரும். குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரருடன் இணக்கமாக செயல்படவும்.

சிம்மம்: சகோதர வகையில் உதவி கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் நீங்கள் தேடிய ஆவணம் கிடைக்கும். வியாபாரம் சிறக்கும்.

கன்னி: எதிர்பாராத பணவரவால் மனமகிழ்ச்சியுண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர். அலுவலகத்தில் மதிப்புயரும்.

துலாம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

விருச்சிகம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். பிரியமானவர்களுடன் சந்திப்பு நிகழும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்கு பிடித்தவர்களுக்காக செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.

மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சாலைகளை கவனமாக கடந்து செல்லவும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்.

கும்பம்: முன்கோபம், வீண் அலைச்சல் வரக் கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் நற்பெயர் உண்டு. மேலதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்