மேஷம்: எதிர்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி ஏற்படும். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
ரிஷபம்: சுபச்செலவுகள் உண்டு. வீட்டுக்குத் தேவையான மின்சாதனப் பொருட்கள் வாங்குவீர்கள். இட வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி சகல வசதிகளுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.
மிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணம் உண்டு.
கடகம்: மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் மறையும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
» ஜெயித்தால் ஓகே; தோற்றால் குறைசொல்வதா? - வாக்குச்சீட்டு முறை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி
சிம்மம்: பூர்வீக சொத்து பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்க்க முயற்சிப்பீர்கள். பணப்பற்றாக்குறை விலகும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு.
கன்னி: வீண் விவாதங்களில் தலையிடாமலிருப்பது நல்லது. பிள்ளைகளால் நிம்மதி கிட்டும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படக் கூடும்.
துலாம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரக் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் ஏற்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள்.
விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள்.
தனுசு: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.
மகரம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகளால் சந்தோஷம் அடைவீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும்.
கும்பம்: குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு பார்க்க வேண்டியிருக்கும். பழைய கடன் பைசலாகும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
மீனம்: எதிர்பாராத செலவு, மனஉளைச்சல் வந்து போகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுங்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago