இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மூத்த சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். உத்தியோகத்தில் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்துவீர்.

ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் முன்னேற்றமுண்டு.

மிதுனம்: விலையுயர்ந்த கலை பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தில் அதிரடியாக செயல்பட்டு லாபமீட்டுவீர். புதிய பங்குதாரர்கள் சேருவார்கள். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி விலகி, மதிப்பு உயரும்.

கடகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்து போகவும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்காதீர்கள். உத்தியோகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

சிம்மம்: புது சிந்தனையால் மனக்குழப்பங்கள் விலகும். சேமிக்கும் அளவுக்கு பணம் வரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவால் சொத்து பிரச்சினை தீரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும்.

கன்னி: திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சி ஏற்பாடாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்.

துலாம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அண்டை அயலாருடன் இருந்து வந்த மோதல் விலகும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

விருச்சிகம்: பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். அலுவலகத்தில் உயரதிகாரி முக்கிய விஷயங்களை பகிரும் அளவுக்கு நெருக்கமாவீர்.

தனுசு: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகவும். தம்பதிக்குள் மனக்கசப்புகள் வரக் கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் உங்களின் தரம் ஒரு படி உயரும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

மகரம்: தாயாரின் மருத்துவ செலவு குறையும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

மீனம்: பழைய பொருட்களை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர். மனைவிவழியில் ஆதாயம் இருக்கும். வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். சரக்குகள்விற்று தீரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்