மேஷம்: வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினரின் ஆசைகள், விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
ரிஷபம்: வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.
மிதுனம்: அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக் கும். வீண் விவாதங்களில் தலையிட வேண்டாம். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியை செய்வீர்கள். அரசு வகையில் அனுகூலம் உண்டு.
கடகம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் உங்களை புரிந்துகொள்வார்கள். வியாபாரத் தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற் படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பண வரவு உண்டு.
கன்னி: நெருங்கிய சொந்த பந்தங்களால் வீண் செலவு ஏற்படும். கணவன் - மனைவிக்குள் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றி மறையும். திடீர் பயணத்தால் அலைச்சல், சோர்வு உண்டாகும்.
துலாம்: எதிர்பாராத பண வரவால், பழைய கடனை பைசல் செய்வீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வேலைச்சுமை குறையும்.
விருச்சிகம்: திடீர் செலவு, மன உளைச்சல் வந்து போகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களால் தொந்தரவு வரும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுங்கள். எடுத்த காரியம் நிறைவேறும்.
தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாதம் குறையும். வியாபாரத் தில் போட்டிகள் மறையும்.
மகரம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார் கள். அரசு வேலைகள் முடிவுக்கு வரும்.
கும்பம்: தொழில் ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வங்கி கடனுதவி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். வெளியூர் பயணத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். புதிய வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago