மேஷம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக்காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.
ரிஷபம்: உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர். உத்தியோகத்தில் ஏற்றம் இருக்கும்.
மிதுனம்: எடுத்த வேலையை முடிக்க போராட வேண்டும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். அலுவலகரீதியாக இருந்த பிரச்சினைகள் பனியாய் உருகும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு.
சிம்மம்: கையில் பணம் புரளும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவர். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபமுண்டு. அலுவலகத்தில் மதிப்புயரும்.
துலாம்: அதிகார பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. முன்கோபத்தை குறைப்பீர். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்.
விருச்சிகம்: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தெளிவு பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருக்கவும். வியாபாரத்தில் லாபம் உண்டு.
தனுசு: குடும்ப உறுப்பினர்களுடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவு செய்வீர். வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
மகரம்: மனவலிமையுடன் எதையும் முடித்து காட்டுவீர். பெற்றோர் விருப்பப்படி நடக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படவும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிட்டும்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
மீனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து முக்கிய முடிவு எடுப்பீர். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர். உத்தியோகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago