மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவால் தொல்லை நீங்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். மேலதிகாரி பாராட்டுவார்.
ரிஷபம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரலாம். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் அமைதி காப்பதால் நன்மை உண்டு.
மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
கடகம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடை நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
» ரூ.2.85 கோடியில் ‘முதல்வர் படைப்பகம்’ - சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவர். தம்பதிக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைதருவர். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்.
துலாம்: அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
விருச்சிகம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். குழப்பம் நீங்கி வியாபாரத்தில் நிம்மதி உண்டு. அலுவலக சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். யாரைப்பற்றியும் குறை கூற வேண்டாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசு காரியங்கள் கைகூடும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு.
கும்பம்: குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். உத்தியோகம் சிறக்கும்.
மீனம்: எடுத்த வேலையை வெற்றியுடன் முடிப்பீர். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago