இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பிரபலங்கள் சந்திப்பால் மனநிறைவு கிட்டும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர். லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

ரிஷபம்: அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். சேமிப்பு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டு கொடுத்து போகவும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

மிதுனம்: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதியுண்டு. கூட்டு தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

கடகம்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாவர். ஓரளவு லாபம் பார்க்கலாம்.

சிம்மம்: மற்றவர்களை நம்பி சில வேலைகளை ஒப்படைத்தும் பயனில்லாமல் போனதால் நீங்களே முடிப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர்கள்.

கன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். அக்கம் பக்கத்தினரின் தொல்லை நீங்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. வியாபாரத்தில் போட்டியை சமாளிக்க போராடுவீர்கள்.

துலாம்: பிள்ளைகளின் பெருமைகளை மற்றவரிடம் சொல்லி மகிழ்வீர். உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பு உண்டு. பங்குதாரரின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: உங்களை தவறாக நினைத்து கொண்டிருந்த உறவினர்கள், நண்பர்களின் எண்ணம் மாறும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு.

தனுசு: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். அலுவலகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி காண்பீர். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து நல்ல லாபம் ஈட்டுவீர்.

மகரம்: வரும் என்று நினைத்திருந்த பணம் வந்துசேரும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பிள்ளை களால் நிம்மதியுண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கியை வசூலிப்பீர்.

கும்பம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மீனம்: குடும்பத்தில் வீண் விவாதங்கள் வேண்டாம். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். உத்தியோகத்தில் பணிச்சுமை உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்