இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: மன நிம்மதியுடன் காணப்படுவீர்கள். உடல் உபாதைகள் நீங்கும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அளிப்பார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். தொழிலில் லாபம் பெருகும்.

ரிஷபம்: வெளி வட்டாரத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும்.

மிதுனம்: கடந்தகால சுகமான அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலக பணிகளை திறம்பட முடிப்பீர்கள்.

கடகம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.

சிம்மம்: அலுவலகத்தில் வேலைச்சுமை, டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது அவசியம். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கன்னி: பழைய உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள்.

விருச்சிகம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். பெற்றோர் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிடைக்கும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மகரம்: சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை உயரும். கவுரவ பதவிகள் தேடி வரும். சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பங்கு சந்தை வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டு.

கும்பம்: எக்காரியத்திலும் நிதானமாக செயல்படுவது அவசியம். குடும்பத்தில் மூத்தவர்களின் அறிவுரையை ஏற்று நடப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

மீனம்: பழைய பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பண புழக்கம் கூடும். வியாபாரத்தில் போட்டி குறையும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்