இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: புது திட்டங்களை தீட்டுவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவர். தாயாருக்கு இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.

ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர். உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூர்வீக சொத்து பிரச்சினை தீரும். மூத்த சகோதரர் உதவுவார். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர். வியாபாரம் நல்ல லாபம் தரும்.

கடகம்: வீட்டில் விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி விலகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்கள் வரக் கூடும். அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும்.

கன்னி: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை கவருவீர் பிரபலங்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளின் உடல் நலம் சீராகும். அலுவலகத்தில் நீண்ட நாளாக தேடிய ஆவணம் கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும்.

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல் விலகும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள்.

விருச்சிகம்: தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

தனுசு: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். எடுத்த வேலைகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும்.

மகரம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தருவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாட்களால் தொல்லை அதிகரிக்கும்.

கும்பம்: எதிர்பார்த்தபடி சிலவேலைகளை முடிப்பீர். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர். வியாபாரத் தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவ லகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

மீனம்: சொந்த ஊரிலிருந்து நற்செய்திகள் வரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வந்து சேரும். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்