இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் இருக்கும். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும்.

ரிஷபம்: மன இறுக்கம் நீங்கி முகப்பொலிவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிப்பீர். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன் பிறந்தோர் உதவிகரமாக இருப்பர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. வியாபாரம் சிறக்கும்.

கடகம்: குடும்பத்தாரிடம் வீண் விவாதம் வேண்டாம். அக்கம் பக்கத்தாரை அனுசரித்து செல்வதால் நன்மை உண்டு. அலுவலக பணிச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

சிம்மம்: குடும்பத்தாருடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கன்னி: தொலை நோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினைகளை முடிப்பீர். தம்பதிக்கிடையே இருந்து வந்த சந்தேகம் விலகும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். அலுவலகத்தில் இடம், பொருள் அறிந்து செயல்படுவீர். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் நல்ல லாபம் தரும்.

விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு நல்ல லாபம் பார்ப்பீர். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.

தனுசு: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்காது. பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மகரம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை அறிவீர். திட்டமிட்டு செயல்களை நடைமுறைப்படுத்துவீர். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர்.

கும்பம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களிடம் கனிவாக பேசுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.

மீனம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். நவீன சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தில் பிரிந்து சென்ற பங்குதாரர் மீண்டும் வருவர். உத்தியோகம் சிறக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்