இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவெடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளியூர் பயணம் உண்டு..

ரிஷபம்: நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய முடிவுகளை கவனமாக எடுங்கள். மூத்தோரின் ஆலோசனைப்படி செயல்படுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். சில காரியங்கள் இழுபறிக்கு பின்னர் முடிவடையும்.

கடகம்: குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் நிறை வேற்றுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வீண் அலைச்சல், டென்ஷன் விலகும்.

சிம்மம்: புது வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசனை செய்வீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பனிச்சுமை குறையும்.

கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

துலாம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும். வரவேண்டிய பணம் கைக்கு வந்துசேரும்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் நடப்பதால் வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். மனைவி வழியில் வீண் விவாதங்கள் வந்துபோகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.

தனுசு: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.

மகரம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். விஐபிகளின் அறிமுகம் கிட்டும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உடன்பிறந்தோர் தக்க சமயத்தில் உதவுவார்கள். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். இழுபறியாக இருந்த தொகை வந்துசேரும்.

மீனம்: தள்ளி போய்க்கொண்டிருந்த சுபகாரியங்கள் கைகூடி வரும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

40 mins ago

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்